சுட்டெரிக்கும் வெயில்: சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச்சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும், அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் போதுமானளவு நீரை அருந்துதல்.

முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல்.

முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துதல்.

திறந்தவெளிகளில் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Homagama
ஹோமாகம ஹெல்மெட் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு; பலர் மீட்க நடவடிக்கை!
jaffna
தங்கத்துரை, குட்டிமணி உருவச்சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!
vavuniya accident
கொழும்பில் இருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து: சாரதி படுகாயம்!
Avengers Doomsday Trailer
Avengers Doomsday Trailer Release: Doctor Doom ஆக மிரட்டும் Robert Downey Jr!
iran
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்கள்: 9-வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!
Esmail Baghaei
அமெரிக்கா - ஈரான் தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை: மத்தியஸ்தர்கள் மூலம் தீவிரமடையும் பேச்சுவார்த்தை