திருகோணமலையில் வீடியோ ஆதாரத்தால் சிக்கிய பொலிஸ்: பணி இடைநீக்கம்!

திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய குறித்த அதிகாரியை பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கு திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கான்ஸ்டபிள் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது கையடக்க தொலைபேசியினால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!