“அமைச்சர்களுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய தொகை மாறாது”: 2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து நாமல் பரபரப்பு பேச்சு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில மூத்த அமைச்சர்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகையைத் தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியதுடன், அந்த விநியோகப் பணிகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக நிறைவு செய்யப்பட்டன என்றும் வினவினார்.

இதேவேளை தங்களுடைய பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானத்தைப் பயன்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அடக்குமுறைகளால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!