மகிந்த ராஜபக்ஷவை நேரில் பார்வையிட்டார் சீலரத்ன தேரர்: உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிவிப்பு!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(13.10.2026) வைத்தியசாலைக்குச் சென்று, மகிந்த ராஜபக்சவை பார்வையிட்டுத் திரும்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை முன்னரை விட மோசமான நிலையில் இருப்பதாக சீலரத்ன தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 83 வயதாகின்றது. அவரது உடல்நிலையும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை நேரில் சென்று பார்த்தபோது, அவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவர் விரைவில் குணமடைய நாம் பிரார்த்திக்க வேண்டும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Vattukottai
வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!
JusticeForUruthirapuramGirl
பரபரப்பு! "அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்" - கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!
SarathWeerasekara
டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
EasterSundayAttacks
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
MankulamStudents
மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!
ShiranthiRajapaksa
கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்