ஞானசார தேரரின் காவி ஆடையைக் காக்க பிக்குகள் முன்னெடுக்கும் பாதயாத்திரை கொழும்பை அண்மிக்கிறது!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைவதைத் தடுப்பதற்கும், அவரை விடுவிப்பதற்கும் உயிர்த்தியாகம் செய்தாவது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்து, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கண்டி ஸ்ரீ தளதா மாளிகையிலிருந்து மெகசின் சிறைச்சாலை வரை பாதயாத்திரையை கடந்த 10ஆம் திகதி ஆரம்பித்தனர்.

இந்தப் பாதயாத்திரையில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அநுநாயக்க தேரர்களோ அல்லது காரக சங்க சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகளோ கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரையின் முதலாம் நாள் நிகழ்வு கடுகன்னாவை பகுதியில் நிறைவடைந்தது. இதில் சுமார் 100 பௌத்த பிக்குகள் உட்பட 300 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.

இதனை அடுத்து, கடுகன்னாவையிலிருந்து கேகாலை நோக்கிய பாதயாத்திரை நேற்று (12) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டபோது, சுமார் 30 பௌத்த பிக்குகள் மாத்திரமே அதில் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் சில பௌத்த பிக்குகளுடன், தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர, சரத் வீரசேகர மற்றும் முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (13) செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்து குறித்த பாத யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Vattukottai
வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!
JusticeForUruthirapuramGirl
பரபரப்பு! "அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்" - கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!
SarathWeerasekara
டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
EasterSundayAttacks
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
MankulamStudents
மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!
ShiranthiRajapaksa
கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்