இலங்கை: நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று நள்ளிரவு (05) 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் சில்லறை விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.

இந்த விலை மாற்றத்தின்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 279 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 340 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 182 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 323 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு பயன்படுத்தப்படும் லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் சந்தை விலை மாற்றங்களுக்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!