பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரச பேருந்து! பொலிசார் தீவிர விசாரணை!

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்கு சொந்தமான CTB பேருந்து இன்று காலை சேவைக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லும்போது காணாமல் போய்வுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 8 மணியளவில் தியத்தலாவ வெலிஹெல்கம பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற இடத்தில் அந்த பேருந்து இருப்பதாக பண்டாரவளை பொலிஸ் குற்றபிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசாரும்,பண்டாரவளை CTB டிப்போ ஊழியர்களும் சென்று பேருந்தை பரிசோதனை செய்துள்ளனர்.

இதன் போது பேருந்தின் முன்பக்க கதவு பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.20 மணி அளவில் அந்த பேருந்து அப்புத்தளை மேல் பாதை காஹகல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சிற்றுந்தொன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பேருந்தை கொண்டு சென்றவர்கள் யார், எதற்காக கொண்டு சென்றனர் என்ற தகவல்கள் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!