இளம் பெண்ணின் திடீரென மரணம்! வைத்தியசாலை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெண்ணின் நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த செனுரியின் மரண விசாரணையில் அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், நான்கு நாட்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அங்கிருந்த வைத்தியர்களால் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த செனுரியின் பெற்றோரும் கணவரும் அவரது மரணத்திற்கு மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவே பிரதான காரணம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை (25) மினுவாங்கொடை ஜாபாலவத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!