கொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம்!

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இயந்திரம் சுவரில் மோதிய வேகத்தில் சுவர் சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் டோசர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!