இலங்கையின் 19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாய சிவப்பு எச்சரிக்கை !

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) காலை 08.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்குக் கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த மட்ட வளிமண்டலக் குழப்பம் மேலும் தீவிரமடைந்து தற்போது ஒரு குறைந்த அழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது.

இந்தக் குறைந்த அழுத்தப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, இலங்கைக்கு அருகில் மேற்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் தக்கத்தால், நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டின் 19 மாவட்டங்களுக்கு ‘அதி உயர்’ அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கையும், 06 மாவட்டங்களுக்கு ‘அதிகரிக்கும் அபாயத்தைக்’ குறிக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கையும் (Amber Alerts) விடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!