உடதும்பர – கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பிக்கு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விகாரையில் தங்கியிருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உடதும்பர பகுதிக்கு சென்றிருந்த அவர், பின்னர் வேறு சில பௌத்த பிக்குகளுடன் இணைந்து ஹீன் கங்கையில் குளிக்கச் சென்றிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
