ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் தனியார் பேருந்து விபத்து: 20 பேர் காயம்

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளடன் இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை