உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார் மற்றும் சில்வா என அழைக்கப்படும் முன்னாள் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம ஆகியோருக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த மூவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் இருவர் உள்ளடங்களாக மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் பயணத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!