சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு மற்றொரு தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருதரப்பினரையும் விடுதியின் பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எனினும், அவர் சுயநினைவை இழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த கேளிக்கை விடுதிக்கு முத்திரையிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!