🔴 PHOTO செம்மணியில் மேலும் 3 மனித ஓட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டது!

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

இன்றைய  அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதுவரை காலமும் 27 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண்ணை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்