🔴 VIDEO பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டையொன்று வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்டது.

@a7tv.com

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி போராட்டம் pillayan JaffnaNewsToday jaffnatamilnewstoday srilankatiktok tranding viralnews srilankatiktok viralvideos jaffnanews jaffnatamilnewstoday jaffnanewstoday anurakumaradissanayake anurakumaradissanayake🔥🇱🇰 trendingpost jaffna

♬ original sound – A7tv – A7tv

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும்  நீதியான விசாரணை நடத்த கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும் இது தொடர்பில் ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில்  இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு பேத்தாழை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

இக்  கையெழுத்து நடவடிக்கையானது மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த  பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ்  தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.அந்த மகஜரில்,
எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் இவ்வாறு  குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!