புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகால மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைகப்பட்டிருந்தது.

தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவிப்பதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்தபகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சென்று அந்த பகுதியை பார்வையிட்டுள்ளனர்… அதன் பின்னரே விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்