அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தை சேர்ந்த மாணிக் அலி என்ற நபர், தனது மனைவியிடம் இருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றதை ஒட்டி, 40 லிட்டர் பாலில் குளித்து, அதனை வாழ்க்கையின் புதிய அத்தியாயம் எனக் கொண்டாடியிருக்கிறார்.
மாணிக் அலியின் மனைவி, கடந்த சில மாதங்களாகவே ஒரு காதலனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. காதலனுடன் இருமுறை வீட்டைவிட்டு வெளியேறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. மகளின் நலனுக்காக மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொண்டிருந்த மாணிக், பிறகு மீண்டும் மனைவி காதலனுடன் தொடர்பில் இருப்பதை கண்டதும், விவாகரத்து தான் ஒரே தீர்வாக கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விவாகரத்தை பெற்றதும், “இது எனது வாழ்க்கையின் புதிய தொடக்கம். சுதந்திரம் கிடைத்த இந்நாளை கொண்டாடவே பாலில் குளித்தேன்,” என கூறியுள்ளார் மாணிக் அலி. தற்போதும் மகள் தனது மாமியாருடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் இது ஒரு தனித்துவமான சம்பவம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Manik Ali from Assam celebrated his divorce with wife in a way that grabbed much attention.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 13, 2025
He bathed in 40 litres of milk soon after his lawyer confirmed to him that the divorce process was complete, as per multiple media reports. pic.twitter.com/RVehKtRYJg