🔴 VIDEO பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை அறுத்த நபர்கள் – அடுத்து மக்கள் செய்ததை பாருங்க!

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை நேற்றையதினம் இரவு பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!