ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்!

சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.

எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதனால் சரிகமபவில் என்னால் சிறப்பாக பாடமுடியவில்லை.

சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர். இருப்பினும் என்னால் சிறந்த முறையில் பாடமுடியவில்லை.இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன்” என சினேகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!