இந்தியாவின் மலையாள ராப் இசை பாடகர் வேடன் கைது!

இந்தியாவின் மலையாள ராப் பாடகர் வேடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரன்தாஸ் முரளி மீது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம் மருத்துவர் ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கேரள பொலிசில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், இந்த மருத்துவர் கொச்சி நகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், 30 வயதான வேடன், 2021 முதல் 2023 வரை பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின்படி, இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களாகி, பின்னர் வேடன் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் உறவு கொண்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர், அவர் திருமண வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியதால், தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக அந்த மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம், பாரதிய நியாய சன்ஹிதா இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றுவதற்கு முன்பு நிகழ்ந்ததால், காவல்துறை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) [ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!