🔴 VIDEO பிரான்சில் காட்டுத்தீ – தண்ணீர் எடுக்க முயன்ற ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்தது

பிரான்சின் பிரிட்டனி மாகாணம், ரோஸ்பெர்டன் நகரின் வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று மொரனி 29 ரக ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரிக்க முற்பட்டது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சில நொடிகள் வட்டமடைந்து பின்னர் நேரடியாக ஏரிக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தண்ணீர் எடுக்கும் தருணத்தில் ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியின் நீரில் உராய்ந்ததே விபத்துக்கு காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்