முல்லைத்தீவு நீதிமன்றில் சான்றுப்பொருளை மாற்றிய குற்றச்சாட்டு: பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு ஒன்றின்போது சான்றுப்பொருளினை மாற்றியமைத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2024 ஆம் ஆண்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற உத்தியோகத்தராக கடமையாற்றிய ஒருவர் மணல் கடத்தல் வழக்கின்போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு உழவு இயந்திரத்தினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சான்றுப்பொருளை மாற்றியமை தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அன்றைய காலத்தில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்துள்ளார்.

தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் (23.06.2026 )அன்று கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை (02.07.2026) அன்றுவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தவிட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்