🔴 VIDEO கிளிநொச்சியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

இன்றையதினம்(05) கிளிநொச்சி ஏ-9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீர்னு தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிசார், தீயை அணைத்து பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

@a7tv.com

கிளிநொச்சி A9வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு இல்லை கார் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் a7tvnews a7tv srilankanewstamil srilankannews srilankatamilnews jaffnanews jaffnanewstoday jaffnanews jaffna jaffnatamilnewstoday srilankanews srilankalatestnews srilankanewstoday news srilankanewstoday breakingnewssrilanka srilankanews srilankanewslive srilankalatestnews srilankanewstamil srilankatamilnewstoday

♬ original sound – A7tv – A7tv

தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒரு முக்கிய நிறுவனம் ஆகும். இதைவிடமும் இன்னமும் பாரிய தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவு இவ்வாறு அலட்சியமாக இருந்த்ல் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

எனவே இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!