ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​இறந்த சிறுமியின் சகோதரர், இரண்டாவது சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது, ​​சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணை மே 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்காவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகிய இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் உயிரிழந்திருந்தார்.

இவரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 ஜூலை மாதம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மரணத்திற்கு நீதி கோரி பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதேவேளை, சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்திருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்