யாழ்ப்பாணத்தில் சோகம்: 17 வயது இளம் தவில் கலைஞர் உயிர் மாய்ப்பு!

இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த கலைஞர் நேற்றையதினம் புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.

அதன்பின்னர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

குறித்த கலைஞர் தனது 8 வயதில் தவில் வாசிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது 17 வயது ஆகின்ற நிலையில் தனது கலை திறமையால் பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!