எரிவாயு தட்டுப்பாடு : நாடு தழுவிய ரீதியில் தீவிர சோதனைகள் ஆரம்பம்!

சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பாக, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சில வர்த்தகர்கள் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக எரிவாயு கிடைக்காததால், பல பகுதிகளில் உள்ள உணவகங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!