மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெல்மடுல்லவிலிருந்து பலாங்கொடை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

power cut
நாடு முழுவதும் மின் தடை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
srilanka 2000 rupe
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி
Ranil in hospital
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
vijay
போலி ‘likes’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்!
News
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை – அதிகபட்சம் ரூ.25,000 அபராதம்
newsss
“சாக போறேன்… சந்தோசமா?” – ஒரு மெசேஜில் முடிந்த புதுமண வாழ்க்கை!