🔴 PHOTO சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குள் சென்று இலஞ்சம் பெற்று மது அருந்தும் பலாலி பொலிஸார்!

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் தமது பொலிஸ் பிரிவை தாண்டி, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினை பகுதிக்கு சென்று அங்கே இலஞ்சம் பெறுவதுடன் குடித்து விட்டு கூத்தடிப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

BCN – 6978 என்ற மோட்டார் சைக்கிளில் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் தினமும் எமது ஊருக்கு வருகின்றனர். எமது ஊரானது சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குள் காணப்படுகிறது.

இவ்வாறு வருகின்ற பொலிஸார் வீதியில் செல்பவர்களையும், பத்திரிகை வாசித்துக் கொண்டு இருப்பவர்களையும் கைது செய்து கொண்டுபோய் கசிப்பு வழக்கு தாக்கல் செய்கின்றனர். கசிப்பு விற்பவர்களிடம் இலஞ்சம் பெற்றுவிட்டு அவர்களை கைது செய்வதில்லை.

எமது ஊரில் உள்ள ஒரு இலந்தை மரத்துக்கு கீழ் இருந்து குறித்த இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்களும் மதுபானம் அருந்திவிட்டு மதுபோதையிலேயே வீதியில் சென்று இவ்வாறு அட்டகாசம் புரிகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது ஊரில் உள்ள தோட்டத்தில் நின்ற இளைஞர் ஒருவரை அவர்கள் கைது செய்து அழைத்துச் செல்ல முயற்சித்தவேளை அந்த இளைஞனின் உறவினர்கள் அவ்விடத்திற்கு சென்று பொலிஸாருடன் முரண்பட்டவேளை அந்த இளைஞன் தலைக்கவசம் அணியவில்லை என விடயத்தை மாற்றி பேசினர்.

சிவில் உடையில், வேறு பொலிஸ் பிரிவுக்கு வந்த பொலிஸ் புலனாய்வாளர்கள் தலைக்கவசம் இல்லாததற்கு எப்படி கைது செய்ய முடியும் என முரண்பட்டபோது அந்த இளைஞனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த பொலிஸ் புலனாய்வாளர்கள் சிலவேளைகளில் தலைக்கவசம் இல்லாமலும் எமது ஊருக்கு வருகின்றனர்.

நேற்றுமுன்தினமும் எமது ஊருக்கு வந்து இவ்வாறு அட்டகாசம் செய்தவேளை ஊரவர்களாக நாங்கள் இணைந்து அவர்களை மடக்கி பிடித்து வைத்திருந்தவேளை சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார் குறித்த இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்களையும் எச்சரித்துவிட்டு அனுப்பினர்.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இவர்கள் தமது எல்லையை தாண்டி சுன்னாகம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குள் வந்து இவ்வாறு அட்டகாசம் செய்கின்றனர். வீடு ஒன்றிற்கு சென்று மரக்கறிகளையும் இலஞ்சமாக பெறுகின்றனர்.

அநுர அரசாங்கம் இலஞ்ச ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இருந்தாலும் வடக்கிலும் கிழக்கிலும் பொலிஸாரின் இவ்வாறான அராஜகங்கள் எல்லை மீறி செல்கின்றன. இதுகுறித்து ஆதாரபூர்வமாக நிரூபித்தாலும், ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் அவர்களுக்கு தண்டனை இடமாற்றம் அல்லது வேறு ஏதாவது சாதாரண தண்டனையே வழங்கப்படுகிறது.

வடக்கு – கிழக்கில் உள்ள பொலிஸாருக்கு அநுர அரசு பயப்படுகின்றதா? குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவருக்கும் கொடுக்கப்போகின்ற தண்டனை என்ன? இலஞ் ஊழல் ஒழிப்பு என்பது தெற்குக்கு மட்டுமே தானா? வடக்கு – கிழக்குக்கு அது பொருந்தாதா? இந்த இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கா விட்டால் மக்களுக்கும் அவர்களுக்குமிடையே ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உயர் அதிகாரிகள் தான் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

5 glas
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்
New Project t (13)
செம்மணி மனித புதைகுழி வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!
exam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
யாழில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (9)
விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!
New Project t (7)
வீதியில் காரை நிறுத்தி மக்களுக்கு “ஹாய்” சொன்ன ஜனாதிபதி அநுர: வைரலாகும் காணொளி!