இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்றிரவு 11 மணிக்குப் பிறகு வானத்தை உற்று நோக்கும்போது ஓரியோனிட்ஸ் எனப்படும் விண்கல் மழையைக் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓரியன் விண்மீன் கூட்டத்தை சுற்றி இந்த விண்கல் மழையைக் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை ஓரியோனிட்ஸ் விண்கல் மழையை மிகத் தெளிவாகக் காணலாம் என விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த விண்கல் மழை ஹெலி எனப்படும் வால் நட்சத்திரத்திலிருந்து ஏற்படுகிறது என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!