கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!

இரு வெளிநாட்டவர்களால் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் முயற்சி, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் 25 வயதுடைய ஆண் ஒருவரும் 29 வயதுடைய பெண் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (10) காலை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32.159 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 321,590,000 (32 கோடி) ரூபா என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் இருவரும் சுங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சுங்கப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!