உகாண்டாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு பேருந்துகள், பாரவூர்தி மற்றும் சிற்றுந்தை முந்திச் செல்ல முயன்றபோது இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உகாண்டா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் மற்றைய வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.