கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தhttps://web.facebook.com/a7tvnews தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார்.
அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்ட தாய், தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
