இலங்கையை உலுக்கிய டிட்வா:தொடருந்து பாதைகள் தொடர்பில் அறிவிப்பு

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளி பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சுமார் 137,265 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிந்துள்ளன.

அழிவுக்குப் பின்னர் இதுவரை 246 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு மீட்பு 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட 35 இலட்சத்து 31ஆயிரத்து 841 மின்சார இணைப்புகளில் 72 சதவீத இணைப்புக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!