பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் செயற்படுகின்றார்.

எனினும் அவரது செயற்பாடுகள் பல விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அண்மைக்காலமாக அவர் மேற்கொண்ட செயற்பாடுகள் ஊடக அடக்குமுறை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருந்த காரணத்தினால் சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் நற்பெயர் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.
அதன் காரணமாக வுட்லரை அப்பதவியில் இருந்து மாற்றிவிட்டு வேறொரு பொருத்தமான நபரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
