இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் குறிப்பாக தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று (28.12.2025 ) குறித்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அப்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் ஒருவர் குறித்த பாகத்தை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படமெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பாகமானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணையின் கழன்று விழுகின்ற பாகங்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

