இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL)விதிப்பு முறையில் திருத்தம் கொண்டு வருவது வாகன இறக்குமதி வரிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நுகர்வோர் மீதான வரிச்சுமை இரகசியமாக அதிகரிக்கும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வாகன விலைகள் அதிகரிக்காது, ஏமாறாதீர்கள் தங்கள் வாகனங்களை விற்gனை செய்ய மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். வாகன விலைகள் குறையும் என்று அமைச்சர் கூறுகின்றார்.

தற்போதைய முறையின் கீழ், 2.5% ஆக இருக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி, வருவாயில் 50% மட்டுமே பொருந்தும், நடைமுறையில், இது 1.25% வரியாகும். இருப்பினும், புதிய திட்டத்தின்படி, வரி விதிப்பு விற்பனை மட்டத்திலிருந்து சுங்க நிலைக்கு மாறும், மேலும் 100% விற்று முதலுக்கு 2.5% முழு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 2.5% வரி மதிப்பு கூட்டலின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.மற்றும் 18% மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) என்பது பொதுமக்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வரி அதிகரிப்பு என்று இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகின்றது.

இருப்பினும், ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய வரி வசூல் முறையின் காரணமாக, வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த சுங்க வரி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.

இது இறுதியில் வாகனங்களின் விலையை நேரடியாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்