உரிய மனநிலையில் இல்லை: வழக்கிலிருந்து டெய்சி விடுவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதியான மனநிலையில் இருக்கின்றாரா? என்பது தொடர்பில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மனநல மருத்துவ அறிக்கையை, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரதிவாதி விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை என அந்த மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டெய்சி ஃபொரஸ்ட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!