இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்த வெளிநாட்டவர்!

கண்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவல் மையமான American Corner நிறுவனத்திற்குள் ஊடகவியலாளர் என அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகளை வீடியோ எடுத்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை ஒருவரைப் பற்றி கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மிதிகம பகுதியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது, அங்கு வந்த வெளிநாட்டவர் தான் ஒரு ஊடகவியலாளர் எனக் கூறி நிறுவனத்தைப் பற்றி விசாரித்துள்ளார்.

பின்னர் தனது சிறிய கருவி மூலம் அலுவலகத்தை வீடியோ எடுக்க முயற்சித்துள்ளார்.

அங்குள்ள அமெரிக்கக் கொடியுடன் கூடிய விண்வெளி வீரரின் புகைப்படத்தைப் பார்த்து, இவை அனைத்தும் பொய், ஏன் இவர்களுக்கு அடிபணிந்து வேலை செய்கிறீர்கள் என அந்த அதிகாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரி வீடியோ எடுக்க எதிர்ப்புத் தெரிவித்தபோது, அவரையும் சேர்த்து வீடியோ எடுத்துள்ளார்.

வருகையாளர் பதிவேட்டில் விபரங்களை எழுத மறுத்த அந்த நபர், அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து அந்த அதிகாரி அமெரிக்க தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளார்.

அவர் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து நடத்திய விசாரணையில், அது வாடகைக்கு பெறப்பட்டது எனத் தெரியவந்தது.

தற்போது அந்த நபர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!