சுவிட்சர்லாந்தில் தீப்பற்றி எரிந்த பேருந்து: 6 பேர் உடல் கருகி பலி

மேற்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகருக்கு அருகில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று (10) மாலை பெர்ன் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தின் கெர்சர்ஸ் (Kerzers) மையப்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டுடிங்கன் (Düdingen) நகராட்சியிலிருந்து புறப்பட்ட இந்தப் பேருந்து, கெர்சர்ஸ் பகுதியை நெருங்கியபோது திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் மூவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் மீட்பு நடவடிக்கையின் போது, மீட்புப் பணியாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கின்றன.

பேருந்திலிருந்த நபர் ஒருவர் பெட்ரோலைத் தன் மீது ஊற்றிக் கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், இதனை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!