லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கூறவில்லை. எவ்வாறாயினும், நாட்டுக்குள் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக லங்கா ஐஓசி நிறுவனமும் அரசாங்கமும் தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம்” எனத் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Harshana Nanayakkara
செம்மணி புதைக்குழி: உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்!
australia
"தற்காப்பு எனக்கூறி தலையில் தாக்குவதா?" — இலங்கை வம்சாவளி இளைஞருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறை தண்டனை!
anura
அரச செலவைக் குறைக்க நடவடிக்கை: 5 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலாத்துறைக்குக் குத்தகைக்கு!
ShakthiSAT
ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயது மாணவி!
vavuniya
வவுனியாவில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பரிதாப பலி!
Chaminda Wijesiri
2019 பண்டாரவளை பொலிஸ் மோதல் வழக்கு: பதுளை எம்.பி சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!