தையிட்டி காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது!

தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்றைய தினம் அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை.

காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மற்றும் கடல் தொழில் அமைச்சர் அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில தினங்களில் தீர்மானித்திருந்தனர்.

இன்றைய தினம் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அங்கு வந்த யாழ் மாவட்ட நில அளவைத் திணைக்களத்தினர் மற்றும் அரசாங்க அதிபர் மா.பிரதிபன் உள்ளிட்டோர் இன்னும் இரண்டு வாரங்கள் தவணை தேவைப்படும் என்றும் அதன் பின்னரே அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்து அரசாங்க அதிபருடன் முரண்பட்டனர் இதற்கு விகாரையின் விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் காணி அளக்க முடியாது என முறைப்பாடு போட்டதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

இதனாலேயே காணியை அளவீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறும் வகையில் சில தனியார்கள் செயற்பட்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

தையட்டி விகாரை அமைந்துள்ள பகுதியானது உயர் பாதுகாப்பு வணிகத்தில் காணப்பட்ட வேளை 2010 ஆம் ஆண்டில் இருந்து மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு குறித்த விகாரை கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!