ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடல்: இலங்கையின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது, ‘IRIS Dena’ கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் ஈரானுக்கு கொண்டு செல்வதற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

IRIS Dena கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

இந்தத் தாக்குதலானது முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு பாரிய யுத்தக் குற்றமாகும்.

இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும், 1949 ஜெனிவா உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது எனவும், இதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!