“18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!” – நாமல் ராஜபக்ச

அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டது எமது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக இந்த சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் அது தவறான முடிவு என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம்(30.07.2026) முன்னிலையான பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் நீதித்துறையின் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது. ஆட்சியதிகாரம் மாறினாலும் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றன என நாங்கள் நம்புகின்றோம்.

ஆனால், இலங்கை பொலிஸார் மீது எமக்க நம்பிக்கை இல்லை. அவர்கள் ஜேவியினரால் இயக்கப்படுகின்றார்கள். பெலவத்தையின் கட்டளைகளுக்கு இணங்கவே தற்போது இலங்கை பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.

பிரதம நீதியரசருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிகாலம் நீடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்ட்டது. ஆனால், தனி நபர்களை இலக்காகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவு மோசமானதாக இருக்கக் கூடும்.

கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது முற்றிலும் தவறானது. இந்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம். இனி வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகளை நாங்கள் செய்யப் போவதில்லை.

அதேபோல, அரசியலமைப்பின் 19 மற்றும் 20ஆம் சீர்த்திருத்தங்களும் தனிநபரை இலக்காகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கமும், இதுபோன்ற தவறை செய்யக் கூடாது. தனி நபரை இலக்காகக் கொண்டு நீதியரசர்களின் பதவிக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பத் திருத்தம் கொண்டு வருவது என்பது தவறான எடுத்துக் காட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!