கிளிநொச்சியில் வீதி விபத்தை தடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(24.06.2026) இடம்பெற்றுள்ளது.

வீதி விபத்தில் உயிரிழந்த அதிபரின் புகைப்படத்துடன், பொலிஸாரிடம் வீதி விபத்தை கட்டுப்படுத்தக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் போராட்டத்தில் இறங்கியவர்கள், வீதி விபத்துக்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் சென்றுள்ளனர்.
