பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (22) உத்தரவிட்டார்.

சந்தேகநபரின் பிணை மனு மீதான உத்தரவு அடுத்த விசாரணை நாளில் வழங்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த விடங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
