தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

நீர்கொழும்பு சிறையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அந்த சமயத்தில் அங்கு பணியாற்றிய சிறை அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களை ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் இன்று(30.07.2026) நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் இடம்பெற்ற போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இடம்பெற்ற வேளையில், பிரதம சிறை அதிகாரியாக இருந்த விக்ரம ஜயந்த குமாரவிடம், அந்த சமயத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர், பிரதம சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அந்தத் தகவல்களை வெளியிடுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், அந்தச் சாட்சியத்தின் உள்ளடக்கங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய சாட்சியங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், வெலிக்கடை சிறையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்கு வந்த 89 சிறை அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் குறித்தும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!