ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) புதன்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!