செல்வ சந்நிதி திருவிழா: காவடிகள், பாதயாத்திரிகளுக்காக பலாலி வீதி திறப்பு – காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனுமதி!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி உயர் பாதுகாப்பு வலய வீதியினூடே பொதுமக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கோ அல்லது வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கோ கடந்த காலத்தில் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இவ்வீதி திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா வியாழக்கிழமையும் (இன்று), தீர்த்தத் திருவிழா வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்களின் வசதியைக் கருத்திற் கொண்டு இராணுவத்தினர் இந்த விசேட தளர்வை அறிவித்துள்ளனர்.

அதன்படி, காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரையிலான காலப்பகுதியில் பொதுமக்கள் பலாலி வீதியினூடாக நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் இந்த அறிவிப்பானது ஆலய உற்சவத்திற்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Vattukottai
வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!
JusticeForUruthirapuramGirl
பரபரப்பு! "அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்" - கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!
SarathWeerasekara
டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
EasterSundayAttacks
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
MankulamStudents
மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!
ShiranthiRajapaksa
கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்