அதிகாலையில் நிகழ்ந்த கோரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

கொழும்பு – கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து இன்று (19) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் தாய் (30), தந்தை (35) மற்றும் 2 வயதும் 6 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் மேல் தளத்தில் தங்கியிருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?